×

திமுக இளைஞர் அணியின் சென்னை கிழக்கு, மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞர் அணியின் சென்னை கிழக்கு, மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளர்களை நியமித்து உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞர் அணியின் சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் டி.லோகேஷ் மற்றும் மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.அழகுபாண்டி ஆகியோர் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளராக வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வானவில் விஜய் நியமிக்கப்படுகிறார். மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளராக எம்.இளங்கோ நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள், இவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post திமுக இளைஞர் அணியின் சென்னை கிழக்கு, மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK Youth Team Chennai ,East ,Madurai North District ,Udhayanidhi Stalin ,Chennai ,DMK Youth Team Chennai East ,Madurai ,North ,District ,DMK Youth Team ,DMK Youth Team Chennai East District Organizers… ,Dinakaran ,
× RELATED ரயில் கட்டண உயர்வை உடனடியாக ரத்து...