வெற்றியை நோக்கி பயணிப்போம் – டி.கே.சிவகுமார்

சென்னை; தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ளோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 1971ம் ஆண்டு மக்கள் தொகையே தொகுதி மறுசீரமைப்புக்கு அடிப்படையாக இருக்க வேண்டும். புதிய மக்கள்தொகை அடிப்படையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பை நிராகரிப்பதாக கடந்தாண்டே கர்நாடக பேரவையில் தீர்மானம், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டம் என்பது வடக்கு, தெற்கு இடையிலான மோதல் அல்ல. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புதான் இந்த கூட்டம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திரண்டுள்ள நாம், நிச்சயம் வெற்றி பெறுவோம். எனது அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இங்கு திரண்டுள்ள நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஒன்றிணைந்திருப்பது தொடக்கம்தான், திட்டங்களை வகுப்பது முன்னேற்றம், ஒன்றிணைந்து செயல்படுவதே வெற்றிக்கான வழி என்று கூறினார்.

The post வெற்றியை நோக்கி பயணிப்போம் – டி.கே.சிவகுமார் appeared first on Dinakaran.

Related Stories: