சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் ஆத்தூர் ஜெயசங்கரன் (அதிமுக) பேசியதாவது: ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய ரூ.36 செலவு ஆகிறது. அரசு ரூ.30க்கு கொள்முதல் செய்கிறது. பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். தமிழகத்தில் பால் உற்பத்தி அளவும் குறைந்து வருகிறது. இதை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* அமைச்சர் ராஜகண்ணப்பன்: பால் உற்பத்தி கடந்த ஆட்சியை காட்டிலும் 11 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. பால் வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் ஏழைகள். எனவே நாங்கள் ஆவின் பால் விலையை ஏற்ற மாட்டோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post ஆவின் பால் விலையை ஏற்ற மாட்டோம்: அமைச்சர் உறுதி appeared first on Dinakaran.