பாக். சீன எல்லையில் நிறுத்த ரூ.7,000 கோடியில் ஏடிஏஜிஎஸ் பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம்: பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்திய ராணுவ தரைப்படையில் தற்போது 105 மிமீ மற்றும் 130 மிமீ பீரங்கி துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதை நவீனமாக்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட ஏடிஏஜிஎஸ் பீரங்கிகளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,000 கோடியில் ஏடிஏஜிஎஸ் பீரங்கிகளை வாங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஏடிஏஜிஎஸ் பீரங்கிகள் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டிஆர்டிஓ), தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும் இணைந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கியது.

155 மிமீ குண்டுகள் கொண்ட இந்த பீரங்கி, மிக நீண்ட பேரலுடன் 45 கிமீ தொலைவில் உள்ள இலக்கையும் தகர்க்கக் கூடியது. இதுபோன்ற 307 பீரங்கிகளையும், அவைகளுக்கான 327 இழுவை வாகனங்களையும் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நவீன பீரங்கிகள் பாகிஸ்தான், சீன எல்லையில் நிலைநிறுத்தப்பட உள்ளன. இதே போல, வான்வழி முன்னெச்சரிக்கை கருவிகள், விமான கட்டுப்பாட்டு அமைப்புகள், டார்பிடோக்கள், டி-90 டாங்கிகளுக்கான இயந்திரங்கள் உள்ளிட்ட 8 வகையான ராணுவ உபகரணங்களை ரூ.54,000 கோடியில் வாங்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

The post பாக். சீன எல்லையில் நிறுத்த ரூ.7,000 கோடியில் ஏடிஏஜிஎஸ் பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம்: பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: