விபத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் மாநகருக்குள் செல்ல அனுமதி இல்லை

வேலூர், மார்ச் 21: காட்பாடி வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி ஆந்திரா செல்லும் கனரக வாகனங்கள் ராணிப்பேட்டை வழியாக செல்ல வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன் போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் சில கனரக வாகனங்கள் காட்பாடி வழியாக சென்று கொண்டிருந்தது. இதனை தடுக்க திருவண்ணாமலையில் இருந்து ஆந்திரா செல்லும் கனரக வாகனங்கள் செல்வதற்கான வழிகாட்டி பலகைகளானது, சாத்துமதுரை, பாகாயம், தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து கனரக வாகனங்கள் வேலூர் மாநகரில் காட்பாடி வழியாக சென்று ஆந்திராவுக்கு கனரக வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நேற்று காலை சுமார் 8 மணியளவில் பெங்களூர் மார்க்கத்தில் இருந்து வேலூர் வழியாக ஆந்திராவுக்கு செல்ல முயன்ற கனரக வாகனங்களை காட்பாடி வழியாக செல்லக்கூடாது எனவும், ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக செல்லவேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ராணிப்பேட்டை செல்லும் வழியில் பாலங்கள் கட்டுவதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை, மேலும் நெரிசல் ஏற்படுகிறது என்று கூறி, காட்பாடி வழியாக லாரிகளை அனுமதிக்க வேண்டும் என டிரைவர்கள் தெரிவித்தனர். அதேசமயம் காட்பாடி வழியாக சென்றால் விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று வழிகாட்பாடி பலகை மற்றும் போலீசாரையும் மீறி வந்த வாகனங்களை நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைத்தனர். இதனால் நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றது. இனிவரும் காலங்களில் வேலூர் மாநகருக்குள் வந்து காட்பாடி வழியாக ஆந்திரா செல்ல அனுமதி இல்லை. காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் இயக்க அனுமதி இல்லை. இரவு 9 மணியில் இருந்து காலை 8 மணி வரை கனரக வாகனங்கள் இயக்கலாம் என்று கூறி கனரக வாகனங்களை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது: பெங்களூரில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் வேலூர் வழியாக காட்பாடி சென்று அங்கிருந்து ஆந்திராவுக்கு செல்கிறது.

இதனால் காட்பாடி பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துக்களும் ஏற்கிறது. இதை குறைக்கும் வகையில் ஆந்திராவுக்கு செல்லும் கனரக வாகனங்களை பள்ளிக்கொண்டா அல்லது ராணிப்பேட்டை வழியாக செல்ல வேண்டும் என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அதற்காக பள்ளிக்கொண்டாவில் போலீசாரை நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்புகின்றனர். ஆனால் இவர்கள் வேலூருக்கு செல்லவில்லை. சென்னை செல்கிறோம் என்று கூறிவிட்டு காட்பாடி வழியாக செல்கின்றனர். பள்ளிகொண்டா வழியாக சென்றால் இங்கு போக்குவரத்து நெரில் குறைவாக உள்ளது. பகல் நேரங்களில் அதிகளவில் கனரக வாகனங்கள் வருவதால் பெரிய அளவில் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. ஆனால் அதை டிரைவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இனி வரும்காலங்களில் மாநகருக்குள் வாகனங்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post விபத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்கள் மாநகருக்குள் செல்ல அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Related Stories: