ஹத்ராஸ்: உபி மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம், பாக்லா கல்லூரியின் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார். இவர்கல்லூரியில் உள்ள மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து வருகிறார் என போலீசுக்கு மர்ம கடிதம் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி சீரஞ்சீவ் நாத் சின்கா,‘‘ பேராசிரியர் ரஜ்னீஷ் செல் போன் மற்றும் லேப்டாப்வை வைத்திருந்தார். அதில் ஸ்கீரின் ஆப் ஆகி இருக்கும் போது நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் செல் போன் மற்றும் லேப்டாப்பில் சிறப்பு சாப்ட்வேரை பொருத்தியிருந்தார். இதை பயன்படுத்தி கடந்த 2019ம் ஆண்டு கல்லூரி ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதே போல் வீடியோக்களை பதிவு செய்து 8 மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.நேற்று முன்தினம் பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் கைது செய்யப்பட்டார்’’ என்றார்.
The post மாணவிகளை மிரட்டி பலாத்காரம் உபியில் கல்லூரி பேராசிரியர் கைது appeared first on Dinakaran.