அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது. தற்சமயம் கடந்த மூன்று மாதமாக மழை எதுவும் இல்லாததால் சுருளி அருவி நீர்பிடிப்பு பகுதிகளான ஈத்தாக்காடு, அரிச்சிப்பாறை பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் நீரின்றி சுருளி அருவி வறண்டு காணப்படுகிறது.
இதற்கிடையில் அடுத்த மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளித்து மகிழ மேகமலை அருகில் உள்ள தூவானம் அணை பகுதியில் இருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
The post கம்பம் அருகே நீரின்றி வறண்டது சுருளி அருவி: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.