நாக்பூர் வன்முறை: விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளத்தைச் 8 பேர் போலீசில் சரண்

நாக்பூர்: நாக்பூர் வன்முறை தொடர்பாக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த 8 பேர் போலீசில் சரணடைந்தனர். நாக்பூர் சம்பாஜி நகரில் உள்ள ஒவ்ரங்க சீப்பின் கல்லறையை அகற்றக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி இரவு திடீரென இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான கடைகள், வாகனங்கள், கடைகள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் பலரும் காயம் அடைந்தனர். வன்முறை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த 8 பேர் போலீசில் சரணடைந்தனர்.

மத உணர்வுகளை புண்படுத்தியதாக வழக்கு பதிந்த போலீசார் அவர்களை கைது செய்த நிலையில் பின்னர் அவர்கள் ஜாமின் பெற்றனர். ஏற்கனவே சிறுபான்மையினர் ஜனநாயக கட்சி தலைவர் உட்பட இரு தரப்பிலும் 30க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வன்முறை மற்றும் போலீசார் மீது வன்முறை மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்து அமைப்பினர் போராட்டம் நடத்திய போது விஷமிகள் சிலர் வதந்தி பரப்பியதே வன்முறைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

The post நாக்பூர் வன்முறை: விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளத்தைச் 8 பேர் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Related Stories: