தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, தயாநிதி மாறன், கனிமொழி என்விஎன் சோமு, பி.வில்சன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்பி தொல் திருமாவளவன், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே; தென் மாநிலங்களை வஞ்சிக்காதே’ என்றும், ‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைக் குறைக்காதே’ என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மக்களவையில் பேசுகையில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழகத்தை போன்ற தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது’ என்றார்.

The post தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: