புதுடெல்லி: உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை சட்டவிரோதம் என அறிவித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், அந்த வரிகளை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா, சீனா உள்ளிட்ட அமெரிக்காவின் 16 வர்த்தக கூட்டாளி நாடுகள் மீது புதிய வர்த்தக விசாரணையை அமெரிக்கா தொடங்கி உள்ளது.
விசாரணயின் முடிவில், இந்த 16 நாடுகளும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால், குறிப்பிட்ட அந்த 16 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன.
