மோடி ஊழலை கண்டித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

திருப்பூர்: மோடியின் ஊழலை கண்டித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  டாஸ்மாக் நிர்வாகங்களை முற்றுகையிட்டு பாஜ சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் பாஜவின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் நகர பாஜ சார்பில் கொசவம்பாளையம் நால் ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜவினர் கோஷம் எழுப்பும்போது, ‘‘ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம், பாஜவின் ஆர்ப்பாட்டம். மோடியின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம்’’ என கோஷம் எழுப்பினர். நிர்வாகி ஒருவர் கோஷமிட அதனைத் தொடர்ந்து தொண்டர்களும் மோடியின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து கோஷமிட்டனர். பாஜவினரே மோடியின் ஊழலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post மோடி ஊழலை கண்டித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: