அன்னயோஜனா திட்ட உறுப்பினர்கள் 31ம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

ஈரோடு, மார்ச் 18: ஈரோடு மாவட்டத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் முன்னுரிமையுடைய குடும்ப அட்டை உறுப்பினர்கள் மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட உறுப்பினர்கள் தங்களது விரல் ரேகையை வரும் 31ம் தேதிக்குள் அந்தந்த ரேஷன் கடைக்கு சென்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தவிர, சிறப்பு முகாம் நடைபெறும்போதும், நியாயவிலை கடை பணியாளர்கள் வீடுகளுக்கு வரும்போது தங்களது கை விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல, இணைய இணைப்பு கிடைக்கப்பெறாத மலை வாழ் மக்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறும்போது சென்று தவறாமல் தங்களது விரல் ரேகையை பதிவு செய்துகொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அன்னயோஜனா திட்ட உறுப்பினர்கள் 31ம் தேதிக்குள் ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: