‘தமிழர் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும்’ நூலையொட்டி சேகரிக்கப்பட்ட, நூற்றாண்டு கால நிதிநிலை அறிக்கைகள், விரிவான திட்ட மதிப்பீடுகள், ஒன்றிய-மாநிலத் திட்டக் குழுக்களின் ஆய்வறிக்கைகள், நிதிநிலை அறிக்கை தொடர்பான செய்திக் கட்டுரைகள், இதழ்கள், நூல்கள், ஒளிப்படங்கள் அனைத்தும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலகச் சிறப்பு இணையப் பக்கத்தில் (https://www.tamildigitallibrary.in/budget) தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நூலை மேற்கண்ட இணையப் பக்கத்தில் வாசிக்கலாம்.
இந்த சிறப்பு இணையப் பக்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், துணைச் செயலாளர்கள் பிரத்திக் தாயள், ரிஷப், தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநர் கோமகன், நூலுருவாக்கக் குழுவைச் சேர்ந்த முதல்வரின் துணைச் செயலாளர் ரகுபதி, திட்ட அலுவலர் இரா.சித்தானை, உதவி இயக்குநர் செல்வபுவியரசன், உள்ளடக்க மேலாண்மை அலுவலர்கள் எம்.ரமேஷ், செல்லப்பா, ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post ‘தமிழர் நிதி நிர்வாகம் தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூல் வெளியீடு: சிறப்பு இணையப் பக்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.