சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் நிறுவனம் பால் விநியோகிக்கும் விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ. 3 என்ற ஊக்கத்தொகையை காலத்தே வழங்க வேண்டும். அப்படி வழங்காமல் ஊக்கத்தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என தாமதமாக வழங்குவதால் பால் விநியோகிக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு பால் கூட்டுறவு சங்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தமிழக அரசு, ஆவின் நிறுவன வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பால் விநியோகிக்கும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள ரூ.120 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.