அதன்பிறகு கார்த்திக் வீட்டிற்கு வந்து பார்த்த போது, சாந்தி தனது கணவர் மீது சாய்ந்த நிலையில் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். அவரது கணவரும் அதே நிலையில் இருந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இருவரையும் மீட்டு கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மரு்துதவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, இருவரும் வரும் வழியில் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மருமகன் கார்த்திக் அளித்த தகவலின்படி கே.ேக.நகர் போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
The post கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார்: சாவிலும் இணை பிரியாத தம்பதி appeared first on Dinakaran.