திருவொற்றியூர் உதவி ஆணையர் இளங்கோவன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போன 10 வயது சிறுமியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிறுமியின் வீட்டிற்கு கொண்டு வந்து இறக்கி விட்டுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை செய்தனர். அப்போது, திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஞானபிரகாஷ் என்பதும் திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனது உறவினருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அங்கு இந்த சிறுமி மண்டபத்திற்கு உள்ளே தனியாக அமர்ந்து கொண்டிருந்தாகவும், கூட்டம் கலைந்து சென்ற பிறகு சிறுமியிடம் கேட்டபோது அவர் தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தார்.
அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தேன் என்றார். பின்னர் சிறுமியிடம் போலீசார் கேட்டபோது, சிறுமி காலையில் தனது வீட்டில் குப்பை என நினைத்து பிளாஸ்டிக் பையில் இருந்த கறியை எடுத்து குப்பை தொட்டியில் வீசி விட்டதாகவும், இதனால் தாய் தன்னை திட்டிவிட்டு, தந்தை வந்ததும் உன்னை கண்டிக்க சொல்கிறேன் பார் என கூறியதாகவும், இதனால் பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறினார். இதை தொடர்ந்து இளைஞரின் செயலை பாராட்டி போலீசார் மற்றும் அந்த பகுதியில் குவிந்த மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் கண்ணீருடன் மகளை கட்டியணைத்து மகிழ்ந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post திருவொற்றியூரில் பரபரப்பு: வீட்டிலிருந்து திடீரென மாயமான 10 வயது சிறுமி: 4 மணிநேரத்திற்கு மீட்பு appeared first on Dinakaran.