இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மார்ச் 18ல் பூமிக்கு திரும்புகின்றனர் என நாசா அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு இந்திய நேரப்படி மார்ச் 19ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், 9 மாதங்கள் விண்ணில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் விண்ணில் இருந்ததற்காக தனியாக ஊதியம் என்பது கிடையாது என்று முன்னாள் விண்வெளி வீரர் கூறினார். அதே நேரத்தில் ஆண்டுக்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு ரூ.1.25 லட்சம் முதல் ரூ.1.62 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு ஊதியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1கோடி முதல் ரூ.1.40 கோடி வரை ஊதியமாக வழங்கப்படும். இது அவர்கள் ஜி.எஸ்.15 அரசு பணியாளர்கள் என்பதால் வழங்கப்படும் ஊதியமே தவிர விண்ணில் செலவிடத்திற்கான ஊதியம் இல்லை என கூறப்படுகிறது. மேலும், விண்வெளியில் 287 நாட்கள் தங்கியதற்காக ஒரு நாளுக்கு 4 டாலர்கள் வீதம், 1,148 டாலர்கள் (சுமார் ரூ.1 லட்சம்) வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post சுனிதா வில்லியம்ஸ் ஊதியம் என்ன?.. விண்ணில் இருந்ததற்காக தனியாக ஊதியம் என்பது கிடையாது: முன்னாள் விண்வெளி வீரர் தகவல்!! appeared first on Dinakaran.