தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர்கள் பயனடைய ரூ.22.80 கோடி நிதி

சென்னை: வேளாண் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: 2025-26ம் ஆண்டில் சுமார் 63 ஆயிரம் மலைவாழ் உழவர்கள் பயனடையும் வகையில், குறுதானிய சாகுபடி, இடுபொருள்கள் விநியோகம், காய்கறி பயிர்களில் பரப்பு விரிவாக்கம், நுண்ணீர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றிற்கு மானியம் வழங்கிட ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மலைவாழ் உழவர் முன்னேற்றத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இப்பயனாளிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் திருவண்ணாமலை, நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருநெல்வேலி, வேலூர், கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

The post தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர்கள் பயனடைய ரூ.22.80 கோடி நிதி appeared first on Dinakaran.

Related Stories: