தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசு கடிதங்களை ஏற்காவிட்டால் திருப்பதியில் முற்றுகையிடுவோம்: பாஜ எம்பி பேட்டி

திருமலை: தெலங்கானா மாநிலம் மெதக் மக்களவை தொகுதி பாஜக எம்பி ரகுநந்தன் ராவ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திருப்பதியில் தெலங்கானா மாநில மக்கள் பிரதிநிதிகள் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படும் என பிப்ரவரி 1ம் தேதி அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என அறிவித்தனர். ஆனால் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களுக்கு சுவாமி தரிசனம் மற்றும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் 294 எம்எல்ஏக்கள் இருந்தனர். அப்போது செய்ய முடிந்தது இப்போது முடியவில்லை என்று கூறி ஆந்திராவில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. எங்கள் மாநில எம்பி, எம்எல்ஏக்களின் சிபாரிசு கடிதங்களை ஏற்க அறங்காவலர் குழுவின் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்து உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தெலங்கானா பிரதிநிதிகளின் கடிதங்கள் ஏற்காவிட்டால் அனைத்து கட்சி மக்கள் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து திருமலைக்கு வந்து முற்றுகையிடுவோம். இரண்டில் ஒன்றை பார்த்து கொள்கிறோம் என்றார்.

The post தெலங்கானா மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசு கடிதங்களை ஏற்காவிட்டால் திருப்பதியில் முற்றுகையிடுவோம்: பாஜ எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: