மாநில அரசின் பட்ஜெட்டை பார்த்து ஒன்றிய அரசு வெட்கப்பட்டாவது தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவேண்டும்: ப.சிதம்பரம் பேட்டி

சிவகங்கை: மாநில அரசு கல்விக்காக நிதி ஒதுக்கியதை பார்த்து, ஒன்றிய அரசிற்கு வெட்கம் வந்தாவது, தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்கும் என நம்புவதாக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கையில் காங்கிரஸ் கிராம கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,

‘‘தமிழக அரசின் பட்ஜெட்டில் கல்விக்காக நிதி ஒதுக்கியதை பார்த்து, ஒன்றிய அரசிற்கு வெட்கம் வந்தாவது, தமிழ்நாட்டின் கல்விக்கான நிதியை விடுவிக்கும் என நம்புகிறேன். பட்ஜெட்டில் ரூபாயை குறிக்கும் குறியீட்டை பயன்படுத்துவதாக இருந்தால் பயன்படுத்தலாம். இல்லையெனில் பிரச்னை இல்லை. அதனை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. குறியீடு என்பது முக்கியமல்ல, அதற்கு பின்னால் வரும் எண்களே முக்கியம். அதில் ஆயிரம் ஒதுக்குகிறார்களா, அல்லது ஜீரோ ஒதுக்குகிறார்களா என பார்க்க வேண்டும்’’ என்றார்.

The post மாநில அரசின் பட்ஜெட்டை பார்த்து ஒன்றிய அரசு வெட்கப்பட்டாவது தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவேண்டும்: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: