சென்னை: பள்ளி கட்டடங்களுக்கு தனியார் மூலம் தீயணைப்பு தடையில்லா சான்று பெற வகை செய்யும் அரசாணையை எதிர்த்த வழக்கில் ஏப்ரல் 9ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு சங்க செயலாளர் நீரஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.