ரூ.250 கோடியில் கடலூர், மேலூரில் காலணி தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் தகவல்

2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கிட பொருளாதார வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாகக் கொண்டு சேர்த்திட அரசு அயராது உழைத்து வருகிறது. அந்த உயரிய நோக்கத்தை நடைமுறைப்படுத்திடும் வகையில் தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். தோல் அல்லாத காலணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உலகின் முன்னணி நிறுவனங்கள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் விழுப்புரம். ராணிப்பேட்டை வேலூர் கன்னக்குறிச்சி கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்ற தோல் அல்லாத காலணி உற்பத்தித் தொழிற்சாலைகளின் மூலம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அவர்களில் 80 சதவீதம் பேர் ஊரகப் பகுதிகளைச் சார்ந்த பெண்களாக இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணி உற்பத்தி துறையில் நாட்டிலேயே அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திட்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்த உற்பத்தித் துறையில் இவ்வருடம் 10,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் மதுரை மாவட்டம் மேலூரிலும், 10,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் கடலூரிலும் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலணி திறன் பயிற்சி மையம் ஒன்றை சிப்காட் நிறுவனம் நிறுவிடும்.

The post ரூ.250 கோடியில் கடலூர், மேலூரில் காலணி தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்: பட்ஜெட்டில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: