100 நாள் வேலை திட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 2ம் தளத்தில் உள்ள ஊரக வளர்ச்சி பிரிவில் வேலை நிறுத்தம் காரணமாக அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும் பெரும்பான்மையான அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பெரும்பான்மையான அலுவலர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் ஈடுபட்டதால் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் அனைவரும் 100 சதவிதம் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அலுவலகம் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் ஊராட்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.
