ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யனேரி ஊராட்சியில் உள்ள அய்யனேரி காலனியில் 500 குடும்பங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்நிலையில் நீர்த்தேக்க தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
தூணில் உள்ள சிமெண்ட் பெயர்ந்து உள்ளிருக்கும் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் இருப்பதாக ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் அப்ப்குதி மக்கள், அசம்பாவிதம் ஏற்படும்முன் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆர்.கே.பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.