அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன், நிர்வாகிகள் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை பழிவாங்கும் நடவடிக்கை: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோரது இல்லங்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆகியோரது இல்லங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கிறது.திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இன்றைக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடர்புடைய இல்லங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கை தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய லஞ்ச ஒழிப்பு துறை சோதனை. எம்ஜிஆர் வழி வந்து அவரின் பாசறையில், ஜெயலலிதாவின் பள்ளியில் ஒழுக்கமாக பயின்றவர்கள் நாங்கள். அஞ்சிப் பிழைக்கவும், அண்டிப் பிழைக்கவும், சுரண்டிப் பிழைக்கவும் எந்தவித தேவையும் எங்களுக்கு இல்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு  கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்….

The post அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன், நிர்வாகிகள் மீது லஞ்ச ஒழிப்பு சோதனை பழிவாங்கும் நடவடிக்கை: ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: