திருவண்ணாமலை, மார்ச் 13: திருவண்ணாமலையில் 2வது நாளாக பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து சுட்டெரிக்க தொடங்கியது. வெயிலின் தாக்கத்தினால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முன்தினமும் மற்றும் நேற்றும் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலையில் பிற்பகல் 2 மணி அளவில் மேக கூட்டங்கள் திரண்டு சுமார் அரை மணி நேரம் மழை பொழிந்தது. கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செங்கம் பகுதயில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இதேபோல் ஆரணி, கீழ்பென்னாத்தூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த கன மழை பெய்தது.
The post திருவண்ணாமலையில் 2வது நாளாக கொட்டிய கன மழையால் வெப்பம் தணிந்தது appeared first on Dinakaran.