அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:எனது பெயர் முருகன் (35). நான் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர், வடக்கு புதுப்பாளையம், பாரதி நகரில் வசிக்கிறேன். எனக்கு பல ஆண்டுகளாக பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன. எப்போதும் சோர்வாக இருப்பதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளேன்.
எனக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கவும், வேலைவாய்ப்பு தரவும் வேண்டும். எனது கோரிக்கை குறித்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினேன். தொழில் செய்ய உதவுவதாக கடிதம் அனுப்பினர். ஆனால், இதுவரை எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எனவே, எனக்கு மருத்துவ சிகிச்சையும், வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி தரையில் உருண்டு வந்து மனு appeared first on Dinakaran.
