விக்கிரவாண்டி, மார்ச் 11: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த சிறுவந்தாடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சரவணன் (23). இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு அவருடன் வேலை செய்து வரும் வேலூர் வலசை கிராமத்தை சேர்ந்த தசரதன் மகன் ஜீவா (22) என்பவருடன் நேற்று முன்தினம் விடுமுறைக்கு வந்து மீண்டும் நேற்று முன்தினம் இரவே பைக்கில் சரவணன் தலைக்கவசம் அணிந்து ஓட்டிக்கொண்டும், ஜீவா பின்னால் உட்கார்ந்து கொண்டும் சென்றுள்ளனர். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை மண்டபம் அருகே பெஞ்சல் புயலில் பாலம் உடைந்து ஒரே திசையில் வாகனங்கள் செல்ல பேரிகார்டு அமைக்கப்பட்டிருப்பதை அறியாமல் நேராக சென்று உடைந்த பாலத்தில் பைக் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கை ஓட்டிச் சென்ற சரவணனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் உயிரிழந்த ஜீவாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விக்கிரவாண்டி அருகே பாலத்தில் பைக் விழுந்து வாலிபர் பலி, நண்பர் படுகாயம் appeared first on Dinakaran.
