ஊராட்சி அலுவலகம் சேதம்

ஏழாயிரம்பண்ணை, டிச. 24: வெம்பக்கோட்டை அருகே சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது முத்துச்சாமிபுரம் கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் தண்ணீர் மற்றும் சாலை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது.

முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் சேதமடைந்துள்ளது. சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இடிந்து அபாயம் உள்ளதால் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்கள் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். இடிந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Stories: