விழாவில் கட்சியின் முதன்மைச் செயலாளர் ருசேந்திரகுமார், தலைமை நிலைய செயலாளர் பூவை முகிலன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநிலச் செயலாளரும், செம்பரம்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவருமான பழஞ்சூர் வின்சென்ட், 500 பெண்களுக்கு புடவைகளை வழங்கி வாழ்த்தினார். இதில் மாநில இளைஞரணி நிர்வாகிகள் மணவூர் மகா வலசை தர்மன், மாநிலச் செயலாளர்கள் கூடப்பாக்கம் குட்டி, பரணி மாரி, பாரதிதாசன், மாநில தொழிற்சங்க செயலாளர் மதிவாசன், மாநில வழக்கறிஞர் அணி தலைவர் சைமான்பாபு,
மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் தாமஸ் பர்ணபாஸ், ஏபிஎல்எப் மாநிலச் செயலாளர் ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் சிவராமன், மாவட்ட தலைவர் மகிமைதாஸ், அந்தோணி, தெய்வானை உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இதில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
The post மகளிர் தின விழாவை முன்னிட்டு 500 பெண்களுக்கு புடவைகள்: புரட்சி பாரதம் சார்பில் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.
