இதில், வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.30 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை துணை செயலாளர் சந்திரபோஸ், மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கனேசன், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், நிர்வாகிகள் கண்ணதாசன் சந்திரகுமார், ராம்குமார், நவக்குமார், ரஞ்சித், சக்கரவர்த்தி, கார்த்திக் ஞானசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில், நரேன்குமார் நன்றி கூறினார்.
The post படகு போட்டியில் வென்ற மீனவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு appeared first on Dinakaran.
