பிரதாபிராமன்பட்டினம் கடல் பகுதியில் ஜப்பான் அரசின் ஒத்துழைப்புடன் கடல்தாழைகள் மறுசீரமைப்பு பணிகள்

புதுக்கோட்டை த ழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற எதிர்வுணர்வு பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படடும் வரும் பிரதாபிராமன்பட்டினம் கடல் பகுதியில் கடல்தாழைகள் மறுசீரமைப்பு பணிகளை ஜப்பான் அரசின் ஒத்துழைப்பு நிறுவனஅதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.

தமிழ்நாடு வனத்துறை புதுக்கோட்டை வனக் கோட்டத்தில் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற எதிர்வுணர்வு பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் ஓம்கார் அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படடும் வரும் கடல்தாழைகள் மறுசீரமைப்பு பணிகளை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகள் ஆய்வுசெய்தனர் கோட்டம் அறந்தாங்கி வனச்சரகம் பிரதாபிராமன்பட்டினம் கடல் பகுதியில் சுமார் 10.63 லட்சம் மதிப்பீட்டில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, பச்சை ஆமை ஆகியவற்றின் வாழ்விடத்தை காப்பதற்கும் ,மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பெரிதும் உதவும் கடல்தாழைகள் மறுசீரமைப்பு பணி சுமார் 100 Ha பரப்பளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகள் சித்தார்த் பரமேஸ்வரன், இஷிகவா ஷாயா தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற எதிர்வுணர்வு பசுமையாக்கல் திட்டத்தின் திட்ட இயக்குனர் வன உயிரினம் முகமது சபாப், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், அறந்தாங்கி வனச்சரக பணியாளர்கள் மற்றும் ஓம்கார் நிறுவன அறக்கட்டளை தலைவர் பாலாஜி மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் வலையில் எதிர்பாராமல் சிக்கிய கடற் பசு மற்றும் கடல் ஆமைகளை மீட்ட மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நிவாரண தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

The post பிரதாபிராமன்பட்டினம் கடல் பகுதியில் ஜப்பான் அரசின் ஒத்துழைப்புடன் கடல்தாழைகள் மறுசீரமைப்பு பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: