1991-ல் தமிழ்நாட்டில் 14.5% மக்கள் தமிழுடன் கூடுதலாக ஒரு மொழியை பேசுபவர்களாக இருந்தனர் என்றும் இது 2011-ல் 22% ஆக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஒடிசாவில், ஒடியா மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் 86%-ல் இருந்து 74.5%ஆக குறைந்தது என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழியை மட்டும் பேசுபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் உதாரணத்திற்கு 1991-ம் ஆண்டு பீகாரில் 90.2% பேர் இந்தியை மட்டும் பேசுவதாக இருந்தனர் என்றும் 2011ல் இது 95.2% ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ள்ளது.
ராஜஸ்தான், உ.பி. இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் பிற மொழிகளை கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் மொழி தேர்வுகளை மீண்டும் ஆய்வு செய்ததில், இந்தி பேசாத மாநிலங்கள் 2-வது மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழ்நாட்டில், தமிழுடன், ஆங்கிலமும் தெரிந்தவர்களின் விகிதம் 1991-ல் 13.5% ஆகவும் 2011-ல் இது 18.5% ஆக உயர்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியவில்லை : நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.
