₹48 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

பரமத்திவேலூர், மார்ச் 6: பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் ஏலத்திற்கு 5,117 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ₹55க்கும், குறைந்த பட்சமாக ₹41.14க்கும், சராசரியாக ₹49.49க்குமாக ₹32,610க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு விவசாயிக்ள 6,955 கிலோ தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். அதிகபட்சமாக தேங்காய் கிலோ ‌₹55.20க்கும், குறைந்தபட்சமாக ₹42.30க்கும், சராசரியாக ₹51.51க்கும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக ₹48,690க்கும் ஏலம் நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹48 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: