மும்பை: பொதுத்துறை வங்கிகள், ஐ.டி. நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால் தொடர்ந்து 10வது நாளாக பங்குச் சந்தை சரிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிந்து 72,990 புள்ளிகளானது. வர்த்தகம் தொடங்கியபோது 452 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் இறுதியில் மீட்சி அடைந்து 96 புள்ளிகள் சரிவுடன் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 37 புள்ளிகள் குறைந்து 22,083 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின.
The post 10வது நாளாக பங்குச் சந்தை சரிவு appeared first on Dinakaran.
