ஆனால் முக்கியமான கட்டத்தில் ஸ்ரேயாஸ் மற்றும் அக்சர் பட்டேல் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை தந்தனர். ஒரு நல்ல ஸ்கோரை நாங்கள் எட்டுவதற்கு இந்த இருவரின் பங்கு ஒரு முக்கியமான விஷயமாக கருதுகிறேன். முதல் இன்னிங்ஸ் முடியும்போது நியூசிலாந்தை நிச்சயம் கட்டுப்படுத்திவிடலாம் என்று நினைத்திருந்தேன். எனது எண்ணத்தை எங்கள் பவுலர்கள் மெய்ப்பித்து விட்டார்கள். குறிப்பாக வருண் சக்கரவர்த்தியை இந்த இடத்தில் பாராட்டியே ஆக வேண்டும். எதிரணி வீரர்கள் பிரஷராக இருக்கும் போது எப்படி பந்து வீச வேண்டும் என்பது வருணுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
வருண் சக்கரவர்த்திக்கு வித்தியாசமான திறமை இருக்கிறது. இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். இதனால் அடுத்த போட்டியில் யாரை அணியில் சேர்ப்பது என்பது மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. ஒரு போட்டியில் செய்த தவறை அடுத்த போட்டியில் செய்யக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி போட்டி நிச்சயம் சவாலானது தான். ஆனால் அன்றைய நாளில் சிறப்பாக ஆடும் அணி வெற்றி பெறும். எனவே போட்டியின் போது எந்த தவறையும் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். அரை இறுதியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.”
The post ஆஸ்திரேலியாவுடனான அரையிறுதி சவாலானது: ரோகித் சர்மா பேட்டி appeared first on Dinakaran.
