திருமயத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருமயம், பிப்.27: திருமயத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுவதால் பொதுமக்கள் குறைகளை தெரிவித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று (27ம் தேதி) காலை 11 மணி அளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்குறைதீர் கூட்டத்தில் திருமயம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள நுகர்வோர்களான பொதுமக்கள் மின்சாரம் தொடர்பான குறைகளை மனுவாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம். கூட்டத்தில் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து பயனடைய வேண்டும் என திருமயம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தாய் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post திருமயத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: