பிஇ-பிஎட் பட்டம் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

சென்னை: பிஇ-பிஎட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

உயர்கல்வித் துறைச் செயலர் கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.டெக் எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலைவாய்ப்பு வகையில் பிஇ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது. இதேபோல், பிஇ படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பிஎட் (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக (இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்களாவர். இந்த முடிவு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பிஇ-பிஎட் பட்டம் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: