சென்னை: இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை என தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். “இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி என்கிற அடிப்படையில் பாஜக அரசு மாற்ற முயற்சிக்கிறது. இந்தி திணிப்பு ஒருபோதும் நடக்காது” என சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டியளித்தார்.