நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 8 ஆண்டாக டிமிக்கி கொடுத்த தலைமறைவு குற்றவாளி கைது

அண்ணாநகர்: நீதிமன்றதில் ஆஜராகாமல் கடந்த 8 ஆண்டுகளாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த தலைமறைவு குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை வடபழனி 100 அடி சாலை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (32), தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 13.11.2014 அன்று இரவு வேலை முடித்துவிட்டு அரும்பாக்கம் வழியாக வீட்டுக்கு செல்லும்போது செல்போனில் பேசியபடி நடந்துசென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், கனகராஜை மறித்து அவர் வைத்திருந்த பணம், செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினார்.

இதுபற்றிய புகாரின் அடிப்படையில், அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (40) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜாமீனில் வெளிய வந்த சங்கர் 2017 முதல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்து ஆஜர்படுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த சங்கரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவரை நேற்றுமுன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 8 ஆண்டாக டிமிக்கி கொடுத்த தலைமறைவு குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Related Stories: