பிளாஸ்டிக் பைகள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

 

சேந்தமங்கலம், பிப். 24: கொல்லிமலை அடுத்த வளப்பூர் நாடு ஊராட்சி, அறப்பளீஸ்வரர் கோயில் வளாகத்தில் பிளாஸ்டிக் பைகள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கொல்லிமலை ஒன்றியம், வளப்பூர் நாடு ஊராட்சி அறப்பளீஸ்வரர் கோயில், வளாகத்தில் பிளாஸ்டிக் பைகள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுநாதன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் சுற்றுலாப் பயணிகளிடம், பிளாஸ்டிக் பைகள் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார். அப்போது, வியாபாரிகளிடம், கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பொருட்களை வழங்கும் பொழுது, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அப்பகுதி கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளை, அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்து, அவற்றுக்கு பதிலாக மஞ்சப் பைகளை வழங்கினர். மேலும், அறப்பளீஸ்வரர் கோயில் வளாகத்தில் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடம் மஞ்சப் பைகளை கொடுத்தனர். நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் உதவி செயற்பொறியாளர் மோகன ஜெயவல்லி, உதவிப் பொறியாளர்கள் கோபி, தேவன், தூய்மை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

The post பிளாஸ்டிக் பைகள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: