சென்னை: அரசு பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவுக்கு நேற்று சென்றனர். இவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழியனுப்பி வைத்தார். பள்ளி அளவில் கல்வி மற்றும் மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய அல்லது மாநில அளவிலும் புகழ் பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என தமிழ்நாடு அரசு அறிவித்து இத்திட்டத்தை செல்படுத்தி வருகிறது.
அந்த அறிவிப்பிற்கு இணங்க பிப்.23 முதல் 28ம் தேதி முடிய 52 மாணவ, மாணவிகள் மற்றும் 4 ஆசிரியர் அலுவலர்கள் என மொத்த 56 நபர்கள் மலேசியா நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு முக்கிய இடங்களை பார்வையிட உள்ளனர். இவர்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வழியனுப்பி வைத்தார்.
The post 52 அரசு பள்ளி மாணவர்கள் மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா: அமைச்சர் வழியனுப்பினார் appeared first on Dinakaran.