பந்தலூர்,பிப்,22: பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ஆல் தி சில்ரன் அமைப்பின் நிலையான வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு இலவச கோழிகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார். சேரம்பாடி கால்நடை மருத்துவர் நவீன்குமார் கோழி மற்றும் கோழி வளர்ப்பு உபகரணங்கள் வழங்கி பேசும்போது பெண்கள் மற்றும் வயதானவர்கள் கடினமான வேலைகள் செய்ய இயலாதவர்கள் வருவாயை பெருக்கி கொள்ள உதவியாக கோழி வளர்ப்பு வாய்ப்புகள் உள்ளது.
இதற்காக ஆல் தி சில்ட்ரன் அமைப்பு மூலம் கோழிகள் மற்றும் கோழி வளர்ப்புக்கான உபகரணங்கள் வழங்கப்படுகிறது.முறையாக அரிசி,சோளம் உள்ளிட்ட கோழி தீவனங்கள் கொடுப்பது ,கோழிகளை மேய வைப்பது மூலம் ஊடசத்துடன் கோழி வளரும். கோழி வளர்த்து முட்டைகள் விற்பது மூலமும், வளர்ந்த கோழிகள் விற்பனை செய்தும் வருவாய் ஈட்ட முடியும். இதனை முறையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
The post ஏழை எளிய மக்களுக்கு இலவச கோழி விநியோகம் appeared first on Dinakaran.
