தமிழக மீனவர் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை கூட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்: இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்டகாலமாக பாதிக்கப்படுகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுத்திட உடனடி மற்றும் தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எனவே, மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடம் இருந்து விடுவிக்க ஏதுவாக, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்த நீடித்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.

The post தமிழக மீனவர் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை கூட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: