ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் போன்ற நிலை உருவாகும். மீண்டும் 1965 போல ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்டும் நிலை ஏற்படும். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வருக்கு நாங்கள் முழு ஆதரவை தருவோம். அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்கவில்லை. உதயகுமார் சில நேரங்களில் சாமியார் போல் மரத்தடியில் அமர்ந்து எடப்பாடிக்கு ஜால்ரா அடிக்கிறார். ஓபிஎஸ் மீது ஜெயலலிதா கோபமாக இருந்ததாக, பொய்யான குற்றச்சாட்டை உதயகுமார் முன்வைக்கிறார். ஓபிஎஸ்சை கொசு என்கிறார் ஜெயக்குமார். கொசு கடித்தே மலேரியா, டெங்கு போன்றவை வரும். ஓபிஎஸ் என்கிற கொசு கடித்தால், அவரால் தாங்க முடியாது. இணைப்பை ஏற்படுத்தாமல் இப்படியே போனால், 2026 தேர்தலில் 26 சீட்டுகள் கூட தேறாது. உதயகுமாருக்கும் டெபாசிட் பறிபோகும்.
* ‘ஜெயலலிதா செருப்பால் அடிச்சு இருப்பார்’
ஜெயலலிதாவிற்கு பிறகு ஓபிஎஸ்சுக்கு முதல்வர் பதவி குத்தகையாக கொடுக்கப்பட்டது என உதயகுமார் கூறியது குறித்த கேள்விக்கு, ‘‘குத்தகைக்கான தொகை கொடுத்து அதனை அவர் எடுத்திருக்கலாமே?. குத்தகை என்று அவர் முன் பேசியிருந்தால், ஜெயலலிதாவின் செருப்பு பிஞ்சிருக்கும். எடப்பாடிக்கு தமிழ் வார்த்தைகளே சரியாக வராது. ஆனால் அவரை புரட்சித்தமிழன் என உதயகுமார் அழைக்கிறார். இரட்டை இலை வழக்கில் எடப்பாடி அச்சத்தில் உள்ளார்’’ என்று புகழேந்தி கூறினார்.
The post சாமியார் உதயகுமார் எடப்பாடிக்கு ஜால்ரா ஓபிஎஸ் என்ற கொசு கடித்தால் ஜெயக்குமாரால் தாங்கமுடியாது: போட்டு தாக்கும் புகழேந்தி appeared first on Dinakaran.
