இந்நிலையில், உ.பி. சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘திரிவேணி சங்கம நீர் புனித நீராடுவதற்கு தகுதியானது. ஆனால் அதில் பாக்டீரியா கலந்திருப்பதாக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி, மகா கும்பமேளாவை சிறுமைப்படுத்த சிலர் விஷம பிரசாரம் செய்து வருகின்றனர். சனாதன தர்மத்துக்கு எதிராக சிலர் போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கங்கை தாய், மகா கும்பமேளா விவகாரத்தில் வதந்தி பரப்புவது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையுடன் விளையாடும் செயலாகும். இந்த நிகழ்ச்சிக்கு எந்த ஒரு கட்சியோ அரசோ ஏற்பாடு செய்யவில்லை. சமூக அமைப்புகள் இந்த விழாவை நடத்துகின்றன. அதற்கு தேவையான வசதிகளை மட்டுமே மாநில அரசு செய்து தருகிறது. இந்த நூற்றாண்டில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது எங்கள் அரசுக்கு கிடைத்த பாக்கியமாகும். போலி பிரச்சாரங்களை முறியடித்து, இந்தியர்கள் மட்டுமல்லாது உலக மக்களும் இந்த விழாவை சிறப்பித்து வருகிறார்கள்’ என்றார்.
இந்நிலையில், பொது இடத்தில் வைத்து கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் இருந்து நீரை எடுத்து யோகி ஆதித்யநாத்தும் அமைச்சர்களும் குடிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் சவால் விடுத்துள்ளார்.
The post குளிப்பதற்கு உகந்ததல்ல என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த நிலையில் மகா கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா..? பிரசாந்த் பூஷண் சவால் appeared first on Dinakaran.
