சென்னை திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில்க்கணக்கில் வராத ₹78,410 சிக்கியது. கேமரா ஆபரேட்டராக உள்ள கோபி என்பவர், பத்திர எழுத்தரிடம் பணம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். சார்பதிவாளர் ஜெயராஜுக்காக, பத்திர எழுத்தர்களிடம் இருந்து கோபி பணத்தை வசூலித்து மாலை நேரத்தில் கொடுப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

The post சென்னை திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: