பாக முகவர்கள் கூட்டத்தில் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் அதுவே நம் லட்சியம்: சுந்தர் எம்எல்ஏ பேச்சு

மதுராந்தகம்: மதுராந்தகம் தொகுதி அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பாக முகவர்கள் கூட்டம் பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் சாரதி மணிமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் பொன்மலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பேசுகையில், ‘அடுத்த ஆண்டு சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியை நாம் தற்பொழுது தொடங்கி உள்ளோம். பூத்துகள் தோறும் 50 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போன்று 200 தொகுதி வெற்றி நிச்சயம் அதுவே நம் லட்சியம்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும், இதே போன்று பள்ளிப்பேட்டை, அத்திவாக்கம், திண்ணலூர் ஆகிய கிராமங்களில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்டத் துணைச் செயலாளர் கோகுலகண்ணன், அவை தலைவர் ரத்தினவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி பார்த்தசாரதி, ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், ஒன்றிய பொருளாளா் ராஜசேகர் தலைவர்கள் சாவித்திரி சங்கர், பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

The post பாக முகவர்கள் கூட்டத்தில் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் அதுவே நம் லட்சியம்: சுந்தர் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: