காரைக்குடி நகரில் புதிதாக வாங்கிய இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு சிறப்பு வகுப்பிற்காக சென்ற பிளஸ் 2 மாணவன் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஸ்கூட்டரில் சாலையைக் கடக்கும் போது, கார் மோதியதில் மாணவன் சுதர்சன், தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு. காரை ஒட்டி வந்த தீபக் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.