சென்னை: விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு, முடக்கப்பட்ட விகடன் இணையதளத்துக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல என முதல்வர் கூறியுள்ளார்.